டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட் நிறுவனம் ‘ரெஜென்சி TR-1’ எனும் டிரான்சிஸ்டர் ரேடியோவை தயாரித்தது. தனது முதல் டிரான்சிஸ்டரை கடந்த 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி சந்தையில் விற்றது. அந்த ரேடியோ பைக்குள் வைத்து கொள்ளும் அளவில் கைக்கு அடக்கமாக தயாரிக்கப்பட்டது.
இது தொழில்நுட்ப வரலாற்றில் முக்கியமான நகர்வு. இன்று தொலைத்தொடர்பு சாதனங்கள் பல்கி பெருகிவிட்டன. ஆரம்ப காலத்தில் தகவல்கள், பொழுதுபோக்குக்காக இருந்த சாதனம் ரேடியோதான். வீதிக்கொரு ரேடியோ வைத்து பலரும் செய்திகள், பாடல்கள் கேட்பார்கள். இதுவே பின்னாளில் பல்வேறு வசதிகளுடன் புதிய பரிமாணம் எடுத்தது.
WRITE A COMMENT