இன்று கலாம் பிறந்த நாள்: மாணவர்களும் இளைஞர்களும் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி


இன்று கலாம் பிறந்த நாள்: மாணவர்களும் இளைஞர்களும் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி

1. சிறிய இலக்கு என்பது குற்றம் என்பதை உணர்கிறேன். என்னுடைய இலக்கு பெரியது. அதை அடைய நான் கடுமையாக உழைப்பேன்.
2. நேர்மையாக உழைப்பேன் நேர்மையாக வெற்றி காண்பேன்.
3. என் குடும்பத்தின், சமூகத்தின், மாநிலத்தின், தேசத்தின், உலகத்தின் நல்ல உறுப்பினராகத் திகழ்வேன்.
4. சாதி, மத, இன, மொழி, தேச வேற்றுமை பாராமல் பிறரைக் காப்பாற்றவோ, மற்றவர் வாழ்க்கையை உயர்த்தவோ முயல்வேன். நான் எங்கிருந்தாலும், ‘‘என்னால் உங்களுக்கு என்ன செய்ய முடியும்?” என்கிற எண்ணம்தான் முதலில் எழும்.
5. போதை, புகை, சூதாட்டம் ஆகியவற்றுக்கு ஒருபோதும் அடிமையாக மாட்டேன். இத்தகைய தீயப் பழக்கவழக்கங்களில் மூழ்கிக் கிடப்பவர்களில் ஐந்து பேரையேனும் மீட்டு அவர்கள் வாழ்க்கை நலம்பெற முயல்வேன்.
6. நேரம் பொன்னானது என்பதை எப்போதும் நினைவில் கொள்வேன்.
7. ஐந்து மரங்களேனும் என்னுடைய சுற்றுப்புறத்தில் நடுவேன். என்னுடைய கிராமமும் நகரமும் மாநிலமும் தூய்மையாகத் திகழ்ந்தால் என் பூமியும் பசுமையாகவும் தூய்மையாகவும் சுழலும். அதற்காக நான் உழைப்பேன். 2030-ல் ஆற்றலில் சுதந்திரமான தேசமாக மாறப் பாடுபடுவேன்.
8. தேசத்தின் இளைஞராக என்னுடைய அத்தனை செயல்களிலும் வெற்றியடைய உழைப்பேன். மற்றவர்களின் வெற்றியையும் கொண்டாடுவேன்.
9. தன்னம்பிக்கை என்னும் ஒளி விளக்கை என் மனதில் ஏற்றுவேன்.
10. என் தேசியக் கொடி என் மனதில் பறக்கிறது. என்னுடைய மாநிலத்துக்கும் தேசத்துக்கும் புகழ் சேர்ப்பேன்.

FOLLOW US

WRITE A COMMENT

x