இந்தியாவின் ஆறாவது பிரதமர் மொரார்ஜி தேசாய். இவர் 1896 பிப்ரவரி 29-ம்தேதி குஜராத்தில் உள்ள புல்சார் மாவட்டத்தில் (தற்போது வல்சாத் என்று அழைக்கப்படும் இடத்தில்) பிறந்தார். மும்பை வில்சன் கல்லூரியில் பட்டம் பெற்றார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார்.
சுதந்திரப் போராட்டத்தின்போது மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டார். 1931-ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார். 1937-ல் வருவாய், வேளாண்மை, வனம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1975-1977 எமர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். 1977-ல் இந்தியாவின் 6-வது பிரதமராக பதவியேற்றார்.
1977-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசாய் குஜராத்தில் உள்ள சூரத் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1977 மார்ச் 24 முதல் 1979 ஜூலை 28 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார். தேசாய் அவசரக்காலத்தின் போது அரசியலமைப்பில் செய்யப்பட்ட பல திருத்தங்களை நீக்கினார்.
WRITE A COMMENT