நவீன இலக்கிய எழுத்தாளர் தி.ஜானகிராமன். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தேவங்குடியில் 1921 பிப்ரவரி 28-ம் தேதி பிறந்தார். தஞ்சாவூரில் புனித பீட்டர்ஸ் பள்ளியில் பயின்றார். ஐரோப்பிய இலக்கியங்கள் கற்றார். கல்லூரியில் படித்தபோது, விடுதலைப் போராட்ட கூட்டங்களில் கலந்துகொண்டு அதுதொடர்பாக பல கதை, கட்டுரைகளை எழுதினார். டெல்லி வானொலி நிலையத்தில் உதவி தலைமை கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றினார்.
தமிழ் இலக்கிய இதழான ‘கணையாழி’ மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1964-ல் வெளியான இவரது ‘மோகமுள்’ நாவல் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. ‘அமிர்தம்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’, ‘நளபாகம்’ உட்பட பல நாவல்களை எழுதியுள்ளார். ‘அம்மா வந்தாள்’ நாவல் ஆங்கிலம், குஜராத்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
கதைகளில் நுட்பமான மனித உணர்வுகளை வெளிப்படுத்தியவர். ‘சக்தி வைத்தியம்’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தமிழ் இலக்கிய உலகின் தனித்துவம் வாய்ந்த படைப்பாளிகளில் ஒருவரான இவர் ‘தி.ஜா.’ என இலக்கிய உலக நண்பர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
WRITE A COMMENT