தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் சுஜாதா. இவரது இயற்பெயர் ரங்கராஜன். சுஜாதா என்ற பெயரிலேயே தனது நூல்களை எழுதியுள்ளார். இவர் 1935-ம்ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார். ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார்.
செயின்ட் ஜோசப் கல்லூரியில் 1954-ம் ஆண்டு இயற்பியல் பட்டம் பெற்றார். முதல்நிலை தொழில்நுட்ப அலுவலராக 14 ஆண்டுகள் டெல்லியில் பணியாற்றினார். 1970-ல்பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் துணை மேலாளராக வேலைக்கு சேர்ந்தார்.
சுஜாதாவின் நண்பர் எழுதிய ‘சுஷ்மா எங்கே?’ என்ற கதையை திருத்தி கொடுத்தார். அது குமுதம் இதழில் வெளியானது. எழுதும் ஆர்வம் அவருக்கு தோன்றியது. அவரின் முதல் படைப்பு இடது ஓரத்தில் 1962-ம் ஆண்டு குமுதத்தில் வெளியானது.
பின்னர், அறிவியல் புனைக்கதைகள் மூலம் நன்கு அறியப்பட்டார். நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் எழுதி ஆனந்த விகடன், குமுதம், கல்கி உள்ளிட்ட இதழ்களில் வெளியானது. மேலும், பிரபல திரைப்படங்களின் வசனகர்த்தா என பல்வேறு தளங்களில் பணியாற்றிய சுஜாதா 2008 பிப்ரவரி 27 அன்று காலமானார்.
WRITE A COMMENT