இன்று என்ன? - ஊக்கம் தரும் கவிஞர் தாராபாரதி


இன்று என்ன? - ஊக்கம் தரும் கவிஞர் தாராபாரதி

வெறுங்கை என்பது மூடத்தனம்- உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்ற நம்பிக்கை ஊட்டும் வரிகளை எழுதியவர் தாராபாரதி. இவர் 1947 பிப்ரவரி 26-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் சிற்றூரில் பிறந்தார்.

இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன். ராதா என்ற தன் பெயரை தாரா என்றும், பாரதியார் மேல் கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரோடு பாரதியை இணைத்துக்கொண்டு தாராபாரதி என்று பெயர் வைத்துக்கொண்டார். 34 ஆண்டுகள் ஆசிரியராக சிறந்த சேவை செய்ததற்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்.

கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். பாரதம் அன்றைய நாற்றங்கால், புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை), விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி, இன்னொரு சிகரம் உள்ளிட்ட கவிதைகள், நூல்கள் ஊக்கமளிப்பதாகவும், முற்போக்கு சிந்தனை நிறைந்ததாகவும் இருக்கின்றன. இவரது நூல்களை தமிழக அரசு 2010-ம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கியது.

FOLLOW US

WRITE A COMMENT

x