இன்று என்ன? - இந்தியர்களுக்கான முதல் மிஷனரி பாடசாலை


இன்று என்ன? - இந்தியர்களுக்கான முதல் மிஷனரி பாடசாலை

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து, அச்சில் ஏற்றியவர் சீகன்பால்கு. இவர் 1682-ல் ஜெர்மனியில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை லத்தீன் பாடசாலைகளில் பயின்றார்.

பின்னர், ஜெர்மனியில் இருந்து ஏழு மாத கப்பல் பயணம் மேற்கொண்டு, 1706 ஜூலை 9-ம் தேதி தமிழகத்தின் கடற்பகுதியான தரங்கம்பாடியை வந்தடைந்தார். சீகன் தன்னைச் சுற்றியிருந்த தொழிலாளர்கள் பேசும் போர்ச்சுக்கீசையும், தமிழையும் கற்றார். கடற்கரை மணலில் விரலால் தமிழ் எழுத்துக்களைப் எழுதி பழகினார். தமிழ் இலக்கண இலக்கியங்களை தன் சொந்த மொழி போல் கற்றுக் கொண்டார்.

ஐரோப்பியர்களின் வீடுகளிலும், தோட்டங்களிலும் வேலை செய்த இந்தியர்களுக்காக, முதல் மிஷனரி பாடசாலை, குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார். 1708 அக்டோபர் 17-ம் தேதி புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். 1715 ஜூலை 15-ம் தேதி தமிழ் புதிய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. 1716-ல் தரங்கம்பாடியில் இறையியல் கல்லூரி நிறுவிய இவர் 1719 பிப்ரவரி 23-ம் தேதி தரங்கம்பாடியில் காலமானார்.

FOLLOW US

WRITE A COMMENT

x