ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்த வள்ளியம்மை


ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்த வள்ளியம்மை

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியவர் தில்லையாடி வள்ளியம்மை. இவர் 1898 பிப்ரவரி 22-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். மயிலாடுதுறை அடுத்த தில்லையாடியை சேர்ந்த நெசவுத் தொழிலாளி முனுசாமியின் மகள் இவர்.

முனுசாமி தென் ஆப்பிரிக்காவில் வியாபாரம் செய்தார். ஆங்கிலேயரால் தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு வரி விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து 1913-ல் காந்தி சொற்பொழிவுகள், போராட்டங்கள் நடத்தினார். இதை கண்ட 15 வயது சிறுமி வள்ளியம்மை விடுதலை போராட்டங்களில் பங்கேற்கத் தொடங்கினார்.

‘தேவாலயங்களில் கிறிஸ்தவச் சடங்குப்படி நடத்தப்படும் திருமணங்கள் மட்டுமே செல்லும்’ என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து ஜோகன்ஸ்பர்க்கில் மகளிர் சத்தியாகிரகப் படை அணி திரண்டது. தடையை மீறி நகர எல்லைக்குள் நுழைந்த அனைவரும் கைது செய்யப்பட்டு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தினால் விடுதலை என்றபோது அது சத்தியாகிரகத்துக்கு இழுக்கு என துணிச்சலுடன் மறுத்தார். சிறையில் கடுமையாக வேலை வாங்கியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 1914 பிப்ரவரி 22-ம் தேதி தனது 16-வது பிறந்தநாளன்றே காலமானார்.

FOLLOW US

WRITE A COMMENT

x