இன்று என்ன? - விடுதலைக்கு விதை போட்ட சென்னம்மா


இன்று என்ன? - விடுதலைக்கு விதை போட்ட சென்னம்மா

விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட முன்னணி வீராங்கனை கிட்டூர் ராணி சென்னம்மா. கர்நாடகத்தில் பெலகாவியில் 1778-ம்ஆண்டு பிறந்தார். சமஸ்கிருதம், கன்னடம், மராட்டி, உருது மொழிகளைக் கற்றார். சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில்வித்தையில் தேர்ச்சி பெற்றார். 1816-ல் கணவரும் 1824-ல் ஒரே மகனும் இறந்தனர்.

ஆங்கிலேயர்களின் வரி வசூல் விஷயத்தில் கோபமாக இருந்த ராணி சென்னம்மாவை ஆங்கிலேயர்கள் பெரும் படையுடன் வந்து கிட்டூர் ராஜ்ஜியத்தை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயப் படையில் 2 முக்கிய அதிகாரிகளை சிறைபிடித்தார். படைத்தளபதி சாப்ளின், ராணியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டு தன் அதிகாரிகளை மீட்டுச் சென்றார்.

ஆனால், நயவஞ்சகத்துடன் மேலும் அதிக படையுடன் வந்து கிட்டூரைக் கைப்பற்றி சென்னம்மாவை சிறையில் அடைத்தனர். புனித நூல்களைப் படித்தும், பூஜைகளில் ஈடுபட்டும் தனது சிறை வாழ்வைக் கழித்த அவர் 1829 பிப்ரவரி 21-ம் தேதி காலமானார். இவரின் வீரத்தை போற்றும் வகையில் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x