இன்று என்ன? - நவீன அறிவியலின் தந்தை கலிலி


இன்று என்ன? - நவீன அறிவியலின் தந்தை கலிலி

கணிதவியலாளர், வானியல் நிபுணர் கலிலியோ கலிலி. இவர் இத்தாலியின் பைசா நகரில் 1564 பிப்ரவரி 15-ம் தேதி பிறந்தார். தந்தையின் ஆசைக்காக பல்கலைக்கழகத்தில் மருத்துவம் சேர்ந்தார். ஆனால், இவருக்கு கணிதம், இயற்பியலில் ஆர்வம் அதிகமாக இருந்தது.

கல்லூரியில் பயின்றுகொண்டே ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ‘பெண்டுலம்’ விதியைக் கண்டுபிடித்தார். தெர்மாஸ்கோப், ஹைட்ரோஸ்டாடிக் பாலன்ஸ் கருவியைக் கண்டறிந்தார். அதைப் பற்றி ஒரு புத்தகமும் எழுதினார். அறிவியலாளர்கள் மத்தியில் அறிமுகம் பெற்றார். மருத்துவப் படிப்பை பாதியில் விட்டுவிட்டார்.

பின்னர், கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் கண்டுபிடித்த டெலஸ்கோப் மூலம் அண்டவெளியில் உள்ள கோள்களைப் பற்றி ஆராய்ந்தார்.

இந்த அனுபவங்களைத் திரட்டி ‘தி டயலாக் ஆஃப் தி டூ பிரின்சிபல் சிஸ்டம் ஆஃப் தி வேர்ல்டு’ என்ற புத்தகத்தை எழுதி பிரபலமானார். வெப்பமானியை உருவாக்கினார். இவ்வாறு பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய கலிலியோவை நவீன அறிவியலின் தந்தை என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அழைத்தார்.

FOLLOW US

WRITE A COMMENT

x