இன்று என்ன? - பட்டாசு தொழிற்சாலை முதல் காஸ்மிக் கதிர் வரை


இன்று என்ன? - பட்டாசு தொழிற்சாலை முதல் காஸ்மிக் கதிர் வரை

இந்திய புவி இயற்பியல் விஞ்ஞானி தேவேந்திரலால். இவர் 1929 பிப்ரவரி 14-ம் தேதி உத்தர பிரதேசம் வாரணாசியில் பிறந்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். மும்பை பல்கலைக்கழகத்தில் தன்னுடைய மேற்படிப்பை நிறைவு செய்தார்.

இவர் தந்தை சொந்தமாக பணம் சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனால் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்தார். பட்டாசில் கலக்கப்படும் வெடிபொருட்களில் என்னென்ன வேதி பொருட்கள் கலக்கப்படுகிறது என்று ஆராய்ச்சி செய்தார்.

காஸ்மிக் கதிர், கனிமங்களின் துகள் பற்றிய ஆய்வுகள் ஆகிய இரண்டிலும் விண்வெளியிலுள்ள அண்டக் கதிர்கள் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். 1950-ல் முதல் அறிவியல் கட்டுரையை வெளியிட்டார்.

அகமதாபாத்திலுள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குனராக 1972 முதல் 1983 வரை பணியாற்றினார் . அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1989 முதல் 2012 வரை கவுரவப் பேராசியராக பணியாற்றினார்.

FOLLOW US

WRITE A COMMENT

x