கவிஞர், எழுத்தாளர், விடுதலை போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு. இவர் ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் 1879 பிப்ரவரி 13-ம் தேதி பிறந்தார். கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
இவர் படைப்புகளால் கவரப்பட்ட ஐதராபாத் நிஜாம், வெளிநாடு சென்று படிக்க உதவித்தொகை வழங்கினார். லண்டன் கிங்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் பயின்றார். இந்தியாவை மையமாக கொண்டு ‘தி கோல்டன் த்ரஷோல்ட்’, ‘தி பேர்ட் ஆஃப் டைம்’, ‘தி ப்ரோக்கன் விங்’ உள்ளிட்ட ஆங்கில கவிதைகளை எழுதினார்.
‘இந்தியாவின் கவிக்குயில்’ என்று வர்ணிக்கப்பட்டார். 1905-ல் இந்திய தேசிய இயக்கத்தில் இணைந்தார். பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்தியப் பெண்கள் சமையலறையை விட்டு வெளியே வந்து நாட்டின் உரிமைக்காகப் போராட வேண்டும் என்றார்.
1919-ல் ஹோம் ரூல் இயக்கத் தூதராக நியமிக்கப்பட்டார். 1925-ல் காங்கிரஸ் தலைவராக இருந்த முதல் பெண் இவர். 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். 1947-ல் உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
WRITE A COMMENT