இன்று என்ன? - மனிதனின் முன்னோடி குரங்கு: டார்வின்


இன்று என்ன? - மனிதனின் முன்னோடி குரங்கு: டார்வின்

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை நிறுவியவர் சார்லஸ் டார்வின். இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத்தில் 1809 பிப்ரவரி 12-ம் தேதி பிறந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியலில் பட்டம் பெற்றார். ஆனால், உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபாட்டோடு இருந்தார்.

ஹெச்.எம்.எஸ். பீகில் கப்பலில் பயணம் செய்தார். அந்த பயணத்தில் அரிய வகை உயிரினங்களின் எலும்புகளையும், தாவரங்களையும், பாறைகளின் மாதிரிகளையும் சேகரித்தார். தன் கண்டுபிடிப்புகளையும் அனுபவங்களையும் “தி வாயேஜ் ஆஃப் தி பீகில்” புத்தகத்தில் வெளியிட்டார். டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு உருவானது.

மரபு வழியில் ஒரே மாதிரியான வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றலைக் கண்டறிந்தார்.

உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். இதை “தி ஆரிஜின் ஆஃப் ஸ்பீஷிஸ் பை நேசுரல் செலக் ஷன்” புத்தகத்தில் எழுதினார்.

மனிதனின் முன்னோர் குரங்கு என்பதை ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்டினார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

FOLLOW US

WRITE A COMMENT

x