இன்று என்ன? - திறமைக்கு முன்னுதாரணம் ஜான் ரஸ்கின்


இன்று என்ன? - திறமைக்கு முன்னுதாரணம் ஜான் ரஸ்கின்

அனுபவம், அறிவு மற்றும் ஆர்வம் ஆகிய மூன்று சக்திகளின் ஒன்றிணைந்த செயல்பாடே திறமை என்றவர் ஜான் ரஸ்கின். விக்டோரியா காலத்தில் ஆங்கில எழுத்தாளர், கலை விமர்சகர், ஓவியர், சமூக சிந்தனையாளர் ஜான் ரஸ்கின் 1819 பிப்ரவரி 8-ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

தந்தை ஆங்கில கவிஞர்கள் பைரன், ஷேக்ஸ்பியர் உள்ளிட்டோரின் புத்தகத்தை படிப்பது மட்டுமின்றி மகனையும் படிக்க சொல்லி ஊக்குவித்தார். ரஸ்கினுக்கும் இலக்கியத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. தாயின் கண்டிப்பால் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளையும் தொடர்ந்து வாசித்தார்.

பயணங்களில் அதிக ஈடுபாடு கொண்ட ஜான் ரஸ்கின் அதன்மூலம் தன்னுடைய எழுத்துப் பணிக்கான உத்வேகத்தை பெற்றார். பின்னர், கட்டுரைகள், கவிதைகள், விரிவுரைகள், ஓவியங்கள், கையேடுகள் மற்றும் கடிதங்கள் ஆகியன இவரது படைப்புகளில் அடங்கும்.

லண்டன் கிங்ஸ் கல்லூரி, ஆக்ஸ்போர்டு பல்கலையில் பேராசிரியராக பணியாற்றினார். கல்வி மற்றும் ஒழுக்கம் குறித்த ‘சிசேம் அண்ட் லில்லி’ என்ற தலைப்பிலான அவரது உரைவீச்சு இவருக்கு பெரும்புகழை தேடித்தந்தது.

FOLLOW US

WRITE A COMMENT

x