இன்று என்ன? - எழுத்தாளரான குழந்தை தொழிலாளர்


இன்று என்ன? - எழுத்தாளரான குழந்தை தொழிலாளர்

19-ம் நூற்றாண்டின் ஆங்கில இலக்கிய நாவலாசிரியர் சார்ல்ஸ் டிக்கன்ஸ். இவர் இங்கிலாந்தின் பொர்ட்ஸ் மௌத்தில் 1812 பிப்ரவரி 7-ம் தேதி பிறந்தார். குடும்ப ஏழ்மை காரணமாக பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டு செருப்பு செய்யும் தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளி ஆக்கப்பட்டார்.

வேலையில் சேமித்த பணத்தை கொண்டு சுயமாக பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்தார். 15 வயதில் சட்ட நிறுவனத்தில் எழுத்தராக சேர்ந்து சட்ட நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். பிறகு மார்னிங் கிரானிகல், மிரர் ஆஃப் பார்லிமென்ட் உள்ளிட்ட செய்தித்தாள்களில் நிருபராக பணியாற்றினார்.

இங்கிலாந்து நாடாளுமன்ற செய்திகளை வெளியிடும் நிருபராகவும் செயல்பட்டார். 1838-ல் ‘ஆலிவர் டிவிஸ்ட்’ நாவலில் தன் சொந்த வாழ்க்கையை தத்ரூபமாக எழுதினார்.

1837 முதல் 1839 வரை பிக் விக் பேப்பர்ஸ் என்ற பத்திரிகையில் தொடர் கட்டுரைகள் எழுதினார். அந்த கட்டுரைகள் அவருக்கு புகழை தேடித்தந்தன. எ டேல் ஆஃப் டூ சிட்டீஸ், கிரேட் எக்ஸ்பெக்டேஷனஸ், நிகலஸ் நிகல் பீ உள்ளிட்ட சமூக மற்றும் வரலாற்று நாவல்களை எழுதி பிரபலமானார்.

FOLLOW US

WRITE A COMMENT

x