இந்திய பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர். இவர் 1929-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் பிறந்தார். இந்தி, வங்காளம், மராத்தி உள்ளிட்ட பல மொழிகள் அறிந்தவர். இவர் பாடிய முதல் மராத்தி பாடல் “கிதி ஹசால்” 1942-ல்வெளியானது.
அதே ஆண்டில் லதாவின் தந்தை இறந்துவிடவே குடும்பம் வறுமைக்குள்ளானது. இசையமைப்பாளர் குலாம் ஹைதர் மஜ்பூர் திரைப்பட பாடல் பாடும் வாய்ப்பை லதாவிற்கு வழங்கினார்.
இவர் தமிழில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் பாடிய வளையோசை, ஆராரோ ஆராரோ, எங்கிருந்தோ அழைக்கும் உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. உலகளவில் அதிக பாடல்கள் பாடியவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.
1989-ம் ஆண்டு இந்திய அரசால் தாதாசாகெப் பால்கே விருது, 1999-ல் பத்ம விபூஷன் விருது, 2001-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. கரோனா தொற்று காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் 2022 பிப்ரவரி 6-ம் தேதி காலமானார்.
WRITE A COMMENT