தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் 1760 ஜனவரி 3-ம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தார். தந்தை ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் இறக்கவே 72 பாளையங்களில் ஒன்றான கிழக்கு பாளையத்தின் ஆட்சியாளராக கட்டபொம்மன் பொறுப்பேற்றார்.
இந்திய விடுதலை போராட்டம் தொடங்குவதற்கு முன்பே ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த மாட்டோம் என்று துணிச்சலாக குரல் கொடுத்தார். ஆங்கில தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக்கு எதிராக 1797 முதல் 1798 வரை நடத்திய போரில் தோற்றார். நெல்லை மாவட்ட ஆட்சியராக ஜாக்சன் துரை கட்டபொம்மனை அழைத்து அவரை அவமானப் படுத்தும் நோக்கில் பலமுறை சந்திக்காமல் அலைகழித்தார்.
பின்னர் 1799-ல் ராமநாதபுரத் தில் சந்தித்த போது கட்டபொம்மனை கைது செய்ய முயன்றார். அங்கிருந்து தப்பித்த கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி வந்தடைந் தார். ஆனால் ஆங்கிலேய தளபதி பானர்மேன் ஆணைப்படி 1799 அக்டோபர் 16-ல் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனின் நினைவை போற்றும் விதமாக 1999-ல் இந்திய அரசு தபால் தலை வெளியிட்டது.
WRITE A COMMENT