எண்ணங்கள் துப்பாக்கிகளை விட அதிக சக்தி வாய்ந்தவை என்று சொன்னவர் ஜோசப் ஸ்டாலின். இவர் ரஷ்ய ஒன்றியத்தின் ஜார்சியாவின் கோரி நகரில் 1878 டிசம்பர் 18-ம் தேதி பிறந்தார். இவர் தந்தை குடும்ப வறுமை காரணமாக சிறுவன் ஸ்டாலினை வேலைக்கு அனுப்பினார். பின்னர் தாயின் அரவணைப்பால் மடாலயப் பள்ளியில் சேர்ந்து உதவித்தொகை மூலம் கல்வி கற்றார். பள்ளி படிப்பிலேயே கார்ல் மார்க்சின் சிந்தனை, கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
இதனால் 1912-ம்ஆண்டு லெனினின் கம்யூனிச கட்சியின் ப்ரவ்டா இதழில் செய்தியாசிரியராக பணியாற்றினார். ரஷ்யா ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார். பொதுவுடைமை கட்சியின் 1922 முதல் பொதுச் செயலாளராக இருந்தார். 1920களின் மத்தியிலிருந்து 1953-ல் இறக்கும் வரையிலான காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்தின் சிறந்த ஆட்சியளராக இருந்தார். பின்தங்கிய சோவியத் ஒன்றியத்தை தொழில்துறை மற்றும் ராணுவத்தில் வல்லரசாக மாற்றினார் ஸ்டாலின். இவருடைய பொருளாதார திட்டங்களால் ரஷ்யாவில் பெரும் தொழிற்புரட்சி ஏற்பட்டது.
WRITE A COMMENT