விடுதலை போராட்ட வீரர், மகாகவி, இதழாசிரியர் சி.சுப்பிரமணிய பாரதியார். இவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882 டிசம்பர் 11-ம் தேதி பிறந்தார். 11 வயதில் கவிதை எழுதும் ஆற்றலை வெளிப்படுத்தினார். எட்டயபுர மன்னரின் அரண்மனையில் அரசவை கவிஞராக இருந்தார். மதுரையில் ‘விவேகபானு’ என்ற இதழில் 1904-ம் ஆண்டு பாரதியார் எழுதிய பாடல் வெளியானது. ‘சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா’ உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றினார். ‘யங் இந்தியா’ என்ற ஆங்கில இதழின் ஆசிரியராக இருந்தார்.
சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி என பன்மொழி வித்தகராக திகழ்ந்தார். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு உள்ளிட்ட முக்கிய பாடல்களை எழுதியுள்ளார். தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம், வந்தே மாதரம் என்போம் உள்ளிட்ட பாடல்களை இயற்றிய பாரதியை மக்கள் பாட்டுக்கொரு புலவன் என்று அழைத்தனர். பாரதியாரை கவுரவிக்கும் வகையில் 1960-ம் ஆண்டு இந்திய அரசு தபால் தலை வெளியிட்டது.
WRITE A COMMENT