இன்று என்ன? - மூத்த சகோதரி இந்திரா கோஸ்வாமி


இன்று என்ன? - மூத்த சகோதரி இந்திரா கோஸ்வாமி

இந்தியாவின் மிகவும் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவர், கவிஞர் இந்திரா கோஸ்வாமி. இவர் 1942-ம்ஆண்டு அசாமின் குவஹாத்தியில் பிறந்தார். லடஷில் பிரைமரி பள்ளியிலும், தரினி சவுதரி பெண்கள் பள்ளியிலும் படிப்பை முடித்தார். பின்னர் குவஹாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில் அசாம் இலக்கியத்தில் பட்டம் பெற்றார். 1962-ல் ‘சினக்கி மோராம்’ என்ற முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட்டார்.

இவரது படைப்புகள் நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இருந்தது. அசாமில் ‘பைடியு’ அல்லது மூத்த சகோதரி என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். இந்திய அளவிலான கருப்பொருள்களுடன், இவரது நாவல்கள் மற்றும் சிறுகதைகள் அசாமிய மொழியிலிருந்து ஆங்கிலம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. 1982-ல் சாகித்ய அகாடமி விருது, 2000-ம் ஆண்டு ஞானபீட விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். 2008-ல்பிரின்ஸ் கிளாஸ் விருது பெற்றார். இவ்விருதினை பெற்ற முதல் இந்தியர் இவரே. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 2011 நவம்பர் 29-ம் தேதி காலமானார்.

FOLLOW US

WRITE A COMMENT

x