இன்று என்ன? - மார்க்ஸின் மூலதனத்தை தொகுத்த ஏங்கல்ஸ்


இன்று என்ன? - மார்க்ஸின் மூலதனத்தை தொகுத்த ஏங்கல்ஸ்

கார்ல் மாக்ஸின் நெருங்கிய நண்பர், ஜெர்மனியின் தத்துவஞானி பிரட்ரிக் ஏங்கெல்ஸ். இவர் 1820 நவம்பர் 28 ஜெர்மனியில் உள்ள பார்மெனில் பிறந்தார். நீச்சல், கத்திச்சண்டை, குதிரை சவாரி போன்ற பல கலைகளையும் பல மொழிகளையும் கற்று சிறந்து விளங்கினார். சிறுவயதில் அப்பாவின் நூற்பாலையில் வேலை செய்தபோது முதலாளித்துவத்தின் எல்லையற்ற அடக்குமுறையை நேரில் கண்டார். அதனால் முதலாளித்துவம் மீது வெறுப்பு ஏற்பட்டது.

1844-ல் ‘ஜெர்மன்-பிரெஞ்ச் இயர் புக்’ இதழுக்காக விஞ்ஞான சோஷலிசத்தின் கோட்பாடுகள் குறித்து எழுதினார். கம்யூனிச கொள்கையின் தந்தை என போற்றப்படும் கார்ல் மார்க்ஸின் இணைபிரியா நண்பரானார். மார்க்ஸ் பெயரில் நியூயார்க் டிரிப்யூன் இதழில் எழுதினார். கார்ல் மார்க்ஸுடன் அதிக நேரம் செலவு செய்வதற்காக அவர் வீட்டுக்கு அருகிலேயே தங்கினார். மார்க்ஸுடன் உரையாடுவதன் மூலம் பல புதிய கருத்துகளை அறிந்து கொண்டார். கார்ல் மார்க்ஸுடன் இணைந்து பொது உடைமை அறிக்கையை தயாரித்தார். மார்க்ஸ் இறப்புக்குப் பிறகு ‘மூலதனம்’ (Das Capital) நூலை தொகுத்தார். மார்க்ஸ் மற்றும் மார்க்ஸிய சித்தாந்தத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக செயல்பட்டார்.

FOLLOW US

WRITE A COMMENT

x