இன்று என்ன? - கிராமப்புற மாணவர்களுக்காக கல்விக்கூடம் உருவாக்கியவர்


இன்று என்ன? - கிராமப்புற மாணவர்களுக்காக கல்விக்கூடம் உருவாக்கியவர்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் ஒருவர் பண்டித் ஹீராலால் சாஸ்திரி. இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 1899 நவம்பர் 24-ம் தேதி பிறந்தார். ஜெய்ப்பூர் மஹாராஜா கல்லூரியில் தேர்வில் முதல் மாணவனாகத் தேர்ச்சியடைந்ததற்காக ‘சாகித்ய சாஸ்திரி’ பட்டம் பெற்றார். 1921-ல் இந்திய அரசு பணியில் சேர்ந்தார். உள்துறை, வெளியுறவுத் துறைகளின் செயலராக உயர்ந்தார். 1927-ல் அரசு பணியை ராஜினாமா செய்தார். வனஸ்தளி என்ற பின்தங்கிய கிராமத்தை தேர்ந்தெடுத்து ‘வனஸ்தளி வித்யாபீடம்’ என்ற கல்விகூடத்தை 1929-ல் தொடங்கினார்.

ஜெய்ப்பூர் ராஜ்ய பிரஜா மண்டலி என்ற குழுவில் இணைந்தார். மக்களின் உரிமைகளுக்காகப் போராடினார். 1939-ல் சத்தியாக்கிரகப் போராட்ட இயக்கத்தை வழிநடத்தியதால் கைது செய்யப்பட்டார். 1949-ல் ராஜஸ்தான் மாநில அரசின் முதல் முதல்வரானார். 1951-ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2-வது மக்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். ஏழை மக்களின் முன்னேற்றத்தை மட்டுமே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு இறுதி மூச்சுவரை பாடுபட்டார்.

FOLLOW US

WRITE A COMMENT

x