ஜெர்மனியின் முன்னணி டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர். இவர் 1967 நவம்பர் 22-ம் தேதி ஜெர்மனியின் லெய்மனில் பிறந்தார். தந்தை டென்னிஸ் மைதான கட்டிடக் கலைஞர். தந்தையுடன் உதவிக்குச் சென்ற போது டென்னிஸ் மீது இவருக்கு அதிகம் ஆர்வம் ஏற்பட்டது. 8 வயதிலேயே போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். 10-ம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை கைவிட்ட போரிஸ் ஜெர்மன் டென்னிஸ் கூட்டமைப்பில் பயிற்சி பெற்று 16 வயதில் தொழில்முறை ஆட்டக்காரர் ஆனார்.
போரிஸ் ஆட்டத்தின் பாணி அதிரடியாக இருக்கும். இதன்மூலம் 17 வயதில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்று டென்னிஸ் ஆட்டத்தில் புதிய வரலாறு படைத்தார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். 1992-ல்ஒலிம்பிக் போட்டியில் மைக்கேல் ஸ்டிச்சுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 2003-ல் டென்னிஸ் விளையாட்டில் சாதனை செய்தவர்களைக் கவுரவிக்கும் விதமாக அமெரிக்காவின் நியூபோர்ட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம்’ அமைப்பில் இவரது பெயர் சேர்க்கப்பட்டது.
WRITE A COMMENT