சமூக சீர்திருத்தக் கருத்துக்களை துணிச்சலாக பேசியவர் வால்டேர். இவர் 1694 நவம்பர் 21-ம் தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் பிறந்தார். சிறு வயது முதலே எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். இளம் வயதிலேயே நகைச்சுவை கைவந்த கலை. அதனால் இலக்கிய வட்டாரத்தில் மிக எளிதாக பிரபலமடைந்தார். தனது பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளவும் அரசியல் ஆதரவைத் பெறவும் கடுமையாக உழைத்தார். இயற்கை விஞ்ஞானம் குறித்த தத்துவங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு வலியுறுத்தினார். எந்தவித அதிகாரமும், எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க கூடாது என்று வாதிட்டார்.
ஆட்சியில் உள்ள மதகுருமார்கள் மற்றும் தேவாலயங்கள் மக்கள் மீது அதிகாரம் செலுத்துவதை எதிர்த்தார் வால்டேர். கன்ஃபூசியஸ், ஜான் லாக், ஐஸக் நியூட்டன், பிளேட்டோ, பாஸ்கல் ஆகியோரின் தாக்கம் இவரிடம் காணப்பட்டது. இவர் பிரெஞ்ச் அறிவொளி இயக்க எழுத்தாளர், மெய்யியலாளர், நாடகம், கவிதை, நாவல், கட்டுரை, வரலாறு, அறிவியல் என இலக்கியத்தின் அத்தனை விஷயங்களைக் குறித்தும் எழுதியுள்ளார்.
WRITE A COMMENT