இன்று என்ன? - உலகப் போருக்கு நோபல் பரிசை அளித்தவர்


இன்று என்ன? - உலகப் போருக்கு நோபல் பரிசை அளித்தவர்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஸ்வீடன் பெண் செல்மா லேகர்லாவ். இவர் 1858 நவம்பர் 20-ம்தேதி ஸ்வீடன் நாட்டின் வார்ம்லேண்ட் நகரில் பிறந்தார். ஸ்டாக்ஹோம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்றார். லேண்ட்ஸ்குரோனா நகரப் பள்ளியில் 1885-ல் ஆசிரியராக பணிபுரிந்தார். ஆசிரியர் பணிக்கு இடையே ‘கோஸ்ட்டா பெர்லிங்ஸ் சகா’ என்ற தனது முதல் நாவலை எழுதினார். வாரப் பத்திரிகை நடத்திய இலக்கியப் போட்டியில் இவரது நாவல் முதல் பரிசு வென்றது.

இவர் எழுதிய ‘தி ஒண்டர்ஃபுல் அட்வென்சர்ஸ் ஆஃப் நீல்ஸ்’ என்ற நூல் உலக அளவில் குழந்தைகளை கவர்ந்த புத்தகம் என்ற பெருமையைப் பெற்றது. 1904-ல் ஸ்வீடன் இலக்கியக் கழகத்தின் தங்கப் பதக்கம், 1909-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்றார். இரண்டாம் உலகப் போருக்கு நிதி திரட்டுவதற்காக தனது நோபல் பரிசு பதக்கம், ஸ்வீடன் அகாடமியின் தங்கப்பதக்கத்தை பின்லாந்து அரசுக்கு அனுப்பினார். இதில் நெகிழ்ந்துபோன பின்லாந்து அரசு வேறு வழிகளில் நிதி திரட்டி இவரது பதக்கங்களை இவரிடமே ஒப்படைத்தது.

FOLLOW US

WRITE A COMMENT

x