இன்று என்ன? - கவிகளுக்கு வழிகாட்டியான மில்டன்


இன்று என்ன? - கவிகளுக்கு வழிகாட்டியான மில்டன்

உலகப் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 1608-ம் ஆண்டு பிறந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

கிரேக்கம், லத்தீன், இத்தாலி, பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றார். 1639-ல் நாடு திரும்பியதும், பன்மொழிப் புலமை பெற்றவராக, அற்புதக் கவிஞராக அசாதாரணத் திறனை வெளிப்படுத்தினார். ஏராளமான கவிதைகளை எழுதினார். தனது நெருங்கிய நண்பர் எட்வர்ட் கிங் மறைவால் மனமுடைந்த ஜான் மில்டன் அவரது நினைவாக ‘லைசிடஸ்’ என்ற இரங்கற்பா எழுதினார். இங்கிலாந்தில் 1649-ல் மன்னராட்சி முடிவுக்கு வர இவர் எழுதிய எழுத்துகளும் பங்காற்றின. கண்களுக்கு அதிகம் வேலை கொடுக்கக் கூடாது என்ற மருத்துவரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் பார்வை முற்றிலுமாக பறிபோனது.

தன் பிள்ளைகள், உதவியாளர்களிடம் புத்தகங்களைப் படிக்கச் சொல்லி கேட்பார். படைப்பு பணியையும் நிறுத்தவில்லை. அதன் பிறகுதான் இவரது மாஸ்டர்பீஸான ‘பாரடைஸ் லாஸ்ட்’ காவியத்தை படைத்தார். வில்லியம் வேர்ட்ஸ்வர்த், வில்லியம் பிளேக், ஜான் கீட்ஸ் உள்ளிட்ட கவிஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார் மில்டன். உலகப் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான ஜான் மில்டன் 1674 நவம்பர் 8-ம் தேதி மறைந்தார்.

FOLLOW US

WRITE A COMMENT

x