சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவர் விபின் சந்திர பால். இவர் வங்கதேசத்தில் போய்ல் என்ற கிராமத்தில் 1858 நவம்பர் 7-ம் தேதி பிறந்தார். ஆசிரியர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர், நூலகர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர். சுதந்திர வேட்கை ஊட்ட ‘வந்தே மாதரம்’ என்ற பத்திரிகை நடத்தினார்.
உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதால் வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஒழிக்கலாம். அந்நிய துணி எரிப்பு, அந்நியப் பொருள் புறக்கணிப்பு, சுதேசி இயக்கம் ஆகியவை இவரது சிந்தனையில் விளைந்தவை. ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியை உணர்ந்தார்.
தேசியக் கல்வி மூலம் இளம் உள்ளங்களில் மிக எளிதாக நாட்டுப்பற்றை ஊட்டலாம் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை. இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ‘இந்திய தேசியம்’, ‘இந்தியாவின் ஆன்மா’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலேயரின் பொருளாதார வலிமை ஆட்டம் கண்டால், ஆட்சி தானாகவே முடிவுக்கு வரும் என்று வலியுறுத்தினார்.
பாரதியாரின் அழைப்பை ஏற்று, சென்னையில் 1907-ல் சுதந்திரப் போராட்ட பிரச்சாரம் செய்தார். இதனால் மக்கள் இவரை ‘புரட்சிக் கருத்துக்களின் தந்தை’ என்று அழைத்தனர்.
WRITE A COMMENT