தமிழகத்தைச் சேர்ந்த புல்லாங்குழல் இசைக் கலைஞர் டி.ஆர்.மகாலிங்கம். இவர் 1926 நவம்பர் 6-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூரில் பிறந்தார். இசைக்கருவி ஜால்ரா வாசிப்பதில் பிரபலமான தாய்மாமா ஜால்ரா கோபாலிடம் கற்கத் தொடங்கினார். ஐந்து வயது முதல் புல்லாங்குழல் வாசிப்பதை சிறுவனுக்குரிய விளையாட்டுத்தனத்துடன் ஆரம்பித்தார். நாளடைவில் காதால் கேட்கும் எந்தப் பாடலையும் புல்லாங்குழலில் வாசிக்கும் திறன் பெற்றார்.
டி.ஆர்.மகாலிங்கத்தின் முதல் இசை கச்சேரி அவருக்கு 7 வயதாகும்போது, மயிலாப்பூரில் 1933-ல் நடைபெற்ற தியாகராஜா இசைத் திருவிழாவில் அரங்கேறியது. அந்த நிகழ்ச்சியின் நிறைவில் பரூர் சுந்தரம், முசிறி சுப்ரமணியமும் சிறுவனுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
வாய்ப்பாட்டில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் புல்லாங்குழலில் நுட்பமாக வெளிப்படுத்துவதில் வித்தகர். புல்லாங்குழல் வாசிப்பில் புதிய தொழில்நுட்பத் திறன்களை அறிமுகப்படுத்தியவர் டி.ஆர்.மகாலிங்கம். இவரை கவுரவிக்கும் விதமாக 1986-ல் இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கியது. ஆனால், இவர் ஏற்க மறுத்தார். கர்நாடக இசைத் துறையினர் இவரை செல்லமாக ‘மாலி’ என்ற அழைத்தனர்.
WRITE A COMMENT