இன்று என்ன? - இந்தியா பற்றி ஆய்வு செய்த அமெரிக்கர்


இன்று என்ன? - இந்தியா பற்றி ஆய்வு செய்த அமெரிக்கர்

அமெரிக்க கல்வியாளர் லாயிட் ருடால்ப் சிகாகோவில் 1927 நவம்பர் 1-ம் தேதி பிறந்தார். எல்ஜின் பள்ளியில் படித்தார். 1948 -ம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1950-ல் எம்பிஏ பட்டம் பெற்றார். பின்னர் 1956-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு பட்டம் பெற்றார்.

18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அரசியல் கட்சிகளின் நிலைமைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். 1964 முதல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் 34 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றினார். 2002-ல் ஒய்வு பெற்றாலும் மதிப்பு பேராசிரியராகத் தொடர்ந்து வேலை செய்தார்.

இந்திய முதலாளித்துவம், மகாத்மா காந்தியின் கொள்கைகள், வழிமுறைகள் பற்றியும் நூல்கள் எழுதினார். 1984-ல் ‘இந்தியாவில் பண்பாட்டு அரசியல்’, 1994-ல் ‘ராஜஸ்தான் பற்றிய எண்ணங்கள்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதினார். ருடால்பின் எழுத்துகளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகம் மூன்று தொகுப்புகளாக வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது. இந்தியா பற்றிய ஆய்வுப் பணிகளைப் பாராட்டி பத்ம பூஷன் விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.

FOLLOW US

WRITE A COMMENT

x