இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் சர்தார் வல்லபாய் படேல். இவர் குஜராத்தில் உள்ள நடியாட் கிராமத்தில் 1875 அக்டோபர் 31-ம் தேதி பிறந்தார்.
1897-ல் பள்ளிப் படிப்பை முடித்தார். 1913-ல்இங்கிலாந்தில் சட்ட படிப்பில் பட்டம் பெற்றார். படேலின் தலைமையில் 1928-ல் பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்றது. வெள்ளத்தாலும் பஞ்சத்தாலும் விவசாயிகளின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் ஆங்கில அரசு விதித்த வரியை விவசாயிகள் செலுத்த தேவையில்லை என்ற கருத்தை வலுவாக முன்வைத்தார்.
இந்த பிரச்சாரத்தின் வெற்றிக்குப் பிறகு, மகாத்மா காந்தி 'சர்தார்' பட்டம் வழங்கினார். குறுநில மன்னர்கள் ஆட்சி செய்த பகுதிகளை ஒன்றிணைத்தார். பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், விடுதலை போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்று இந்தியாவை வழிநடத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.
2014 முதல் படேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவரை கவுரவிக்கும் விதமாக 2016-ல்இந்திய அரசு தபால் தலை வெளியிட்டது. குஜராத்தின் கேவாடியா நகரில் நர்மதா ஆற்றின் நடுவே உள்ள சாது பெட் தீவில் 2018-ல் சர்தார் வல்லபாய் படேலின் உலகின் மிக உயரமான சிலை 597 அடி உயரத்தில் நிறுவப்பட்டது.
WRITE A COMMENT