மேற்கு வங்கத்தை சேர்ந்த புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர் ஜதீந்திரநாத் தாஸ். 1904 அக்டோபர் 27-ம்தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இவருக்கு 9 வயதாக இருந்தபோது தாயார் சுஹாசினி தேவி காலமானார். சந்திர சேகர் ஆசாத், சுக்தேவ் தாப்பர், சசீந்திரநாத் ஆகியோர் தலைமையில் ‘ஹிந்துஸ்தான் குடியரசுக் கழகம்' தொடங்கப்பட்டபோது அதை வலுப்படுத்த தாஸ் முக்கியப் பங்காற்றினார்.
பகத்சிங்கின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ஜதீந்திரநாத் தாஸ். 1928-ல் கொல்கத்தாவில் இருந்தபோது காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நேதாஜியுடன் இணைந்தார். லாகூர் சிறையில் 1929 ஜூன் 15-ல் இந்திய அரசியல் கைதிகளுக்கும் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களுக்கும் சம உரிமை கோரி தாஸ், பகத் சிங் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
அப்போது தாஸின் நுரையீரல் சேதமடைந்து பக்கவாதத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆனாலும் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வில்லை. அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு சிறை அதிகாரிகள் அவரை விடுதலை செய்ய முடிவெடுத்தனர். ஆங்கிலேய உயரதிகாரிகள் அதை நிராகரித்தனர். 63 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் 25 வயது தாஸ் உயிர் நீத்தார்.
WRITE A COMMENT