இன்று என்ன? - மால்குடியால் புகழ்பெற்ற நாராயண்


இன்று என்ன? - மால்குடியால் புகழ்பெற்ற நாராயண்

‘மால்குடி டேஸ்’, ‘ஸ்வாமி அண்ட் ஃப்ரண்ட்ஸ்’ உள்ளிட்ட நாவல்களால் அழியா புகழ் பெற்றவர் ஆங்கில நாவல் ஆசிரியர் ஆர்.கே. நாராயண். இவர் 1906 அக்டோபர் 10-ம் தேதி மைசூரில் பிறந்தார். சென்னையில் பள்ளிக் கல்வி பெற்றார். ‘தி இந்து’விலும் ஆனந்த விகடனில் இருந்து வெளிவந்த ‘The merry’ இதழிலும் எழுதி வந்தார். அவரின் முதல் கதை வேர்க்கடலை உண்ண பாக்கெட் மணி இல்லாமல் அலையும் சிறுவனைப் பற்றியது. அக்கதைக்கு அவர் பெற்ற சன்மானம் 10 ரூபாய். மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் இருந்துள்ளார். ராகிங் கொடுமை, குழந்தைகள் சுமக்கும் புத்தக மூட்டை ஆகியவற்றுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தை உருவாக்கி பல நாவல்களை எழுதினார். இந்திய அரசு இவரை சிறப்பிக்கும் வகையில் மைசூரிலிருந்து யஷ்வந்த்பூர் வரை செல்லும் விரைவு ரயிலுக்கு மால்குடி என்று பெயர் சூட்டியது. 1960-ல் இவரது ‘தி கைடு’ புதினத்திற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவ்விருது பெற்ற முதல் ஆங்கில நூல் இதுவே. 1964-ல் பத்ம பூஷண் விருதும், 2001-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.

FOLLOW US

WRITE A COMMENT

x