இன்று என்ன? - மருத்துவ தொண்டு செய்த புரட்சியாளர்


இன்று என்ன? - மருத்துவ தொண்டு செய்த புரட்சியாளர்

மருத்துவர், கியூபா புரட்சியாளர்களில் ஒருவர் சேகுவேரா. இவர் 1928-ம்ஆண்டு அர்ஜென்டினாவில் உள்ள ரொசாரியோவில் பிறந்தார். சிறந்த ரக்பி விளையாட்டு வீரராக இருந்தார். 1948-ல் மருத்துவம் படிப்பதற்காக புவனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1951-ல் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, நண்பன் ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் இணைந்து தென்அமெரிக்கா முழுவதும் பயணம் செய்தார்.

பெரு நாட்டில் இருந்த தொழுநோயாளிகளுக்கு தொண்டு செய்தார். பின்னர் இப்பயணத்தின்போது தான் எடுத்த குறிப்புகளைப் பயன்படுத்தி "மோட்டார் சைக்கிள் குறிப்புகள்" (The Motorcycle Diaries) புத்தகத்தை எழுதினார். உலக அளவில் அதிக விற்பனையான நூலாக இது நியூயார்க் டைம்ஸ் இதழால் அறிவிக்கப்பட்டது. இப்புத்தகம் 2004-ல் திரைப்படமாக்கப்பட்டது.

கியூபாவின் மத்திய வங்கியின் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார். 1964 கியூபாவின் பிரதிநிதியாக ஐ.நா. அவையின் 19-வது அமர்வில் உரையாற்றினார். 1966-ல் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். அமெரிக்க சிறப்பு ராணுவ நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டார். புரட்சியாளர் சே குவேரா பொலிவிய ராணுவத்தால் 1967 அக்டோபர் 9 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

FOLLOW US

WRITE A COMMENT

x