சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பரமசிவ சுப்பராயன். இவர் சேலம் போக்கம்பாளையத்தில் 1889-ல் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், அயர்லாந்து டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டமும் பெற்றார். 1918-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார்.
1922-ல் சென்னை மாகாண சட்டப்பேரவையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இவர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் முதன் முறையாக அரசாங்க வேலைகளில் பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட் டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அரசாணை அமல்படுத்தப்பட்டது. 1937-ல் சென்னை மாகாணத்திற்கு மாநில சுயாட்சி வழங்கப்பட்டபின், சட்டம் மற்றும் கல்வி துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட முதல் ஆட்சிமொழிக் குழுவின் உறுப்பினராக, ஆங்கிலம் இந்தியாவின் ஆட்சி மொழியாகத் தொடர வேண்டுமென வலியுறுத்தினார்.
பிரதமர் நேருவின் இரண்டாவது அமைச்சரவை யில் போக்குவரத்துத் துறை அமைச்சரானார். மகாராஷ்டிரா ஆளுநராக ஏப்ரல் 1962-ல் நியமிக்கப்பட்ட அதே ஆண்டு அக். 6-ம் தேதி காலமானார்.
WRITE A COMMENT