இன்று என்ன? - மாநிலக் கல்லூரியின் முதல் ஆய்வாளர்


இன்று என்ன? - மாநிலக் கல்லூரியின் முதல் ஆய்வாளர்

தமிழ்ப் பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர், இதழாளர் சாலை இளந்திரையன் திருநெல்வேலி சாலை நயினார் பள்ளிவாசல் என்னும் சிற்றூரில் 1930-ம்ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் வ.ரா.மகாலிங்கம்.

1948-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் பயின்றார். 1954-ல் சென்னை மாநிலக் கல்லூரியில் முதன்முறையாக இலக்கிய முதுநிலை பட்டத்திற்கான ஆய்வு வகுப்பு தொடங்கப்பட்ட போது வகுப்பில் 1954–55-ம் கல்வி ஆண்டில் முதல் மாணவராகச் பயின்று ஆய்வு பட்டத்தைப் பெற்றார். ‘பிரசண்ட விகடன்’, 'தமிழ்ப் பொழில்’ உள்ளிட்ட பல பிரபல இதழ்களில் இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதினார்.

1954-57வரை சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறையில் பேராசிரியராகவும், 1959-ல் டெல்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றினார். அப்பல்கலைக்கழகத்திலேயே 1983-ல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். 1991-ல் பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு விழாவில் பாரதிதாசன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட இளந்திரையன் 1998 அக்டோபர் 4-ம் தேதி காலமானார்.

FOLLOW US

WRITE A COMMENT

x