இன்று என்ன? - கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அள்ளிய செரீனா


இன்று என்ன? - கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அள்ளிய செரீனா

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா ஜமீக்கா வில்லியம்ஸ் 1981 செப்டம்பர் 26-ம் தேதி அமெரிக்காவின் மிச்சிகனில் பிறந்தார். இவர் மூன்று வயது முதல் டென்னிஸ் விளையாடி வருகிறார்.

புளோரிடாவின் டென்னிஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். 14 வயதில் “பேங்க் ஆஃப் தெ நெஸ்ட் கிளாசிக்” எனும் பந்தய விளையாட்டில் விளையாடத் தீர்மானித்தார். ஆனால், மகளிர் டென்னிஸ் சங்கம் வயது குறைவு காரணமாக இவரை விளையாட அனுமதிக்கவில்லை. 16 வயதில் தொழில்முறை டென்னிஸ் விளையாட்டுகளில் பங்குபெற்றார். தமது சகோதரி வீனசுடன் 1998-ம் ஆண்டு முதல் 23 முறை நேரடியாக விளையாடி 13 முறை வென்றுள்ளார்.

எட்டு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் 6-ல் வென்றுள்ளார். 6 ஆஸ்திரேலிய ஓப்பன் ஒற்றையர் பட்டங்களைப் பெற்ற ஒரே வீராங்கனை இவர். 2002-ல் மகளிர் டென்னிஸ் சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் ஒற்றையர் ஆட்டத்தில் 7 முறை முதல் இடத்தை பிடித்தார். இரட்டையர் ஆட்டங்களில் மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதுவரை 39 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்று சாதனை படைத்த ஒரே வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்.

FOLLOW US

WRITE A COMMENT

x