இன்று என்ன? - பயணிகளை காத்த பணிப்பெண்


இன்று என்ன? - பயணிகளை காத்த பணிப்பெண்

தைரியத்திற்கும், துணிச்சலுக்கும் பெயர்பெற்றவர் நீரஜா பனோத். மும்பை பத்திரிகையாளரான ஹரிஷ் பனோத் மற்றும் ரமா தம்பதியின் மகளான இவர் 1963 செப்டம்பர் 7-ம் தேதி சண்டிகரில் பிறந்தார்.

சண்டிகரில் ஆரம்பக் கல்வி பயின்றார். குடும்பம் மும்பைக்கு இடம்பெயர்ந்ததால் ​​பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில் படிப்பை தொடர்ந்தார். பின்னர் மும்பையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். ’மாடலிங்’ செய்ய தொடங்கினார்.

1985-ல் விமான பணிப்பெண் வேலையில் சேர்ந்து ’பான் அம் 73’ என்ற விமானத்தில் பணிபுரிந்தார். 1986-ல் எதிர்பாராத விதமாக பான் அம் விமானம் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் தனது உயிரை பற்றி கவலை கொள்ளாமல் விமானத்தில் இருந்த பல பயணிகளை அவசர கால கதவை திறந்து துணிச்சலாக நீரஜா பனோத் காப்பாற்றினார். அப்போது தீவிரவாதிகளில் ஒருவர் நீரஜாவை நெற்றியில் சுட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது உயிர் தியாகத்தை போற்றி இந்திய அரசு குடிமக்களின் வீரதீர செயல்களுக்கு வழங்கும் அசோக சக்கர விருதை நீரஜாவுக்கு அளித்து மரியாதை செலுத்தியது. இவர் நினைவாக இந்திய அஞ்சல் துறை 2004-ல் அஞ்சல் தலை வெளியிட்டு, கவுரவப்படுத்தியது.

FOLLOW US

WRITE A COMMENT

x