இன்று என்ன? - தலைவர்களுக்கு : வழிகாட்டிய தலைவர்


இன்று என்ன? - தலைவர்களுக்கு : வழிகாட்டிய தலைவர்

இந்திய அரசியல் தலைவர்களில் ஒருவர் தாதாபாய் நவுரோஜி. இவர் 1825 செப்டம்பர் 4-ம் தேதி மும்பையில் பிறந்தார். மும்பை எல்பின்ஸ்டன் கல்வி நிலையத்தில் பயின்றார்.1850-ல் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம் மற்றும் தத்துவ உதவிப் பேராசிரியராகவும், 1855-ல்லண்டன் பல்கலைக்கழகத்தில் குஜராத்தி மொழியியல் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இவர் 1885-ல் ஆலன் ஆக்டவியன் ஹியூம் மற்றும் உமேஷ் சந்திர பானர்ஜியுடன் சேர்ந்து இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கினார். 1885-88 வரை மும்பை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1892-95 வரை ஐ.நா. சபையில் உறுப்பினராக இருந்தார்.

’பாவர்ட்டி அண்ட் அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இந்தியா’ (Poverty and Un-British Rule in India) என்ற நூல் ஆங்கிலேய அரசின் கொடுங்கோன்மை பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது. பால கங்காதர திலகர், காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் தங்களுக்கு வழிகாட்டியாக நவுரோஜியை குறிப்பிட்டனர்.

நாட்டின் வளங்களை அபகரித்து, காலணி ஆதிக்கத்தின் மூலம் வரிவிதித்து மக்களை ஆங்கிலேயர்கள் சுரண்டியதைப் புள்ளியியல் ஆதாரங்களுடன் நிரூபித்தார். இவரை கவுரவப்படுத்தும் விதமாக, பாகிஸ்தான் கராச்சி வீதிக்கு, லண்டன் பின்ஸ்பெரி பகுதிக்கு மற்றும் டெல்லி மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்புப் பகுதிக்கு ‘தாதாபாய் நவுரோஜி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x