உலகின் சிறந்த முதலீட்டாளர், தொழிலதிபர் வாரன் எட்வர்ட் பஃபெட். இவர் அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் ஒமாகா நகரில் 1930 ஆகஸ்ட் 30-ம் தேதி பிறந்தார். இளம்வயதில் மளிகைக் கடையில் வேலை செய்தார். 1945-ல் வாஷிங்டனில் உள்ள உட்ரோ வில்சன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
அப்போது நண்பருடன் சேர்ந்து 25 டாலர் செலவில் விளையாட்டு இயந்திரத்தை வாங்கி முடி திருத்தும் நிலையத்தில் வைத்தார். சில மாதங்களிலேயே சொந்தமாக மூன்று விளையாட்டு இயந்திரங்களை வாங்கினார். பின்னர் 1950-ல்நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார்.
பிரபல நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை எழுதினார் அதில் “பரம்பரை சொத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை, பணம் கொழிக்கும் சூழலில் வளர்பவர்கள் அதிர்ஷ்ட குழுவை சேர்ந்தவர்கள்” என்று விமர்சித்தார். 2006-ல் தன்னுடைய சொத்தில் 85 சதவீதத்தை தொண்டு நிறுவனங்களுக்கு அள்ளி கொடுத்தவர் வாரன் பஃபெட்.
WRITE A COMMENT