ஹாக்கி பந்தை கையாள்வதில் மேதை எனப் புகழப்பட்டவர் தியான் சந்த். இவர் 1905 ஆகஸ்ட் 29-ம் தேதி உத்தரபிரதேசம் அலகாபாத்தில் பிறந்தார். தந்தையின் பணி மாறுதல் காரணமாக பள்ளிப் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
இளம்வயதில் குத்துச்சண்டையை தவிர வேறெந்த விளையாட்டின் மீதும் அதிக நாட்டமில்லை. 1928-ல்ஆம்ஸ்டர்டமிலும், 1932-ல் லாஸ் ஏஞ்சல்சிலும், 1936-ல்பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்திய அணி தங்கம் வெல்ல முதன்மையான காரணமானார். ஹாக்கி வரலாற்றில் 400 கோல் அடித்த வீரர் தியான் சந்த் மட்டுமே. 1956-ல் பத்ம பூஷண் விருது பெற்றார்.
இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது 2014-ல் தியான் சந்துக்கு வழங்கி இந்திய அரசு அவரை கவுரவித்தது. அதுவரை வேறெந்த விளையாட்டு வீரருக்கும் இந்த விருது வழங்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தியான் சந்த் பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக இந்தியாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. விளையாட்டு துறையில் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது இவரது நினைவாக ’மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது’ என 2021-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
WRITE A COMMENT