இன்று என்ன? - உலகின் முதல் மொழி தமிழ்


இன்று என்ன? - உலகின் முதல் மொழி தமிழ்

ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் கொண்ட ராபர்ட் கால்டுவெல் 1814-ம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார். கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். 24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷ்னரி சொசைட்டி என்னும் கிறிஸ்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து 1838 ஜனவரி 8-ம் தேதி சென்னைக்கு வந்தார்.

விவிலியத்தை வட்டார மொழியில் கற்பிப்பதற்காகத் தமிழைக் கற்றார். தமிழ்மொழியில் 1841-ல் பட்டம் பெற்றார். திருநெல்வேலி இடையன்குடியில் 50 ஆண்டுகள் தங்கி மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். 1856-ல் ’திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் புத்தகத்தை எழுதினார். தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் எல்லாம் தமிழிலிருந்து பிறந்த மொழிகள் என்று கண்டுபிடித்தார்.

தமிழ்மொழிக் குடும்பம் இருப்பதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தினார். அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொண்டு வந்த ராபர்ட் கால்டுவெல் 1891 ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார்.

FOLLOW US

WRITE A COMMENT

x