இன்று என்ன - அரசியல் அறிஞர் ஹாஸ்டிங்ஸ்


இன்று என்ன - அரசியல் அறிஞர் ஹாஸ்டிங்ஸ்

பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் 1732-ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். வெஸ்ட்மினிஸ்டர் பள்ளியில் படித்தார். கடுமையாக உழைத்து, உருது, பாரசீகம் போன்ற மொழிகளை கற்றார். கிழக்கிந்திய கம்பெனியின்கீழ் வங்காள மாகாணத்தின் முதல் தலைமை ஆளுநராக 1773 முதல் 1785 வரை பணியாற்றினார்.

இவர் காலத்தில்தான் இந்தியாவில் கம்பெனி ஆட்சி தொடங்கியது. 1752-ல் ஆங்கிலேயேர்களின் முக்கிய வணிகத் தலமான காசிம் பஜார் பகுதியில் ஆளுநராக பணிபுரியும்போது கிழக்கிந்திய கம்பெனியை வணிகரீதியாக விரிவுபடுத்தும் உத்தி அறிந்தார். இதனால் ஆங்கிலேய அரசியல் அறிஞர் என்று அழைக்கப்பட்டார்.

சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட மாகாணங்களுக்கு தனித்தனி தலைமை ஆளுநர் முறையை நீக்கினார். ஒரே தலைமை ஆளுநர் முறையை கொண்டுவந்தார். மேலும் இந்தியாவின் தலைமை ஆளுநராக 1773-ம் ஆண்டில் பதவி உயர்வு செய்யப்பட்டார். இந்தியாவின் தலைமை ஆளுநராக பத்தாண்டுகள் பணியாற்றிய இவர் 1818 ஆகஸ்ட் 22-ம் தேதி காலமானார்.

FOLLOW US

WRITE A COMMENT

x