இன்று என்ன? - ஐ.நா.வின் முதல் பெண்


இன்று என்ன? - ஐ.நா.வின் முதல் பெண்

ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவர், இந்திய தூதராக பணியாற்றியவர், ஜவகர்லால் நேருவின் தங்கை விஜயலக்ஷ்மி பண்டிட். இவர் 1900 ஆகஸ்ட் 18-ம்தேதி அலகாபாத்தில் பிறந்தார். 1937 முதல் 1939 வரை உள்ளாட்சி மற்றும் பொது சுகாதார துறையின் அமைச்சராக இருந்தார்.

இரண்டாம் உலகப் போரில் ஆங்கில அரசுக்கு ஆதரவாக இந்திய போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 1953-ல் ஐ.நா. பொதுச்சபையின் 8-வது தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அந்த பொறுப்பை ஏற்ற முதல் இந்தியப் பெண் ஆனார்.

1958-ல் ’தி எவல்யூஷன் ஆஃப் இந்தியா’ என்ற புத்தகத்தை எழுதினார். மகாராஷ்டிராவின் ஆளுநராக 1962 முதல் 1964 வரை இருந்தார். 1967- 1971 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார். 20-ம் நூற்றாண்டில் பொது வாழ்வில் ஈடுபட்ட முக்கிய பெண்ணான இவர் தனது எழுத்து மூலம் மக்களிடம் பிரபலமானார்.

FOLLOW US

WRITE A COMMENT

x