உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர், நோபல் பரிசு பெற்றவர் வி.எஸ்.நைப்பால். இவர் 1932 ஆகஸ்ட் 17-ம் தேதி இங்கிலாந்தின் டிரினிடாட் தீவில் உள்ள சாகுவானஸ் நகரில் பிறந்தார். சிறுவயதில் எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஆக்ஸ்போர்டில் உயர்கல்வி பயின்றார். சிறிது காலம் பி.பி.சி.யில் ’கரீபியன் வாய்சஸ்’ நிகழ்ச்சியை எழுதி இயக்கினார். முதல் நாவல் 1963-ல் ‘மிஸ்டர் ஸ்டோன் அன்ட் தி நைட்ஸ் கம்பானியன்’ வெளிவந்து ஹாவ்தார்ன்டென் பரிசு வென்றது. சிறுகதைகள், புதினங்கள், உரைநடை நூல்களை எழுதினார்.
இவரது ‘மிஸ்டிக் மெசைர்’ நாவலைத் தழுவி 1957-ல் திரைப்படம் எடுக்கப்பட்டது. பல்வேறு நாடுகளின் அடிமை முறைகள், உள்ளூர் புரட்சிகள், அரசியல் நிலவரங்கள், அரசியல்வாதிகளின் ஊழல்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் நிலை, கொரில்லாப் போர் எனப் விஷயங்கள் குறித்து எழுதினார். புக்கர் பரிசு, டேவிட் கோகன் பிரிட்டிஷ் இலக்கியப் பரிசு, கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவற்றை பெற்றார். 2001-ல் வெளிவந்த ‘ஹாஃப் அ லைஃப்’ நூலுக்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார்.
WRITE A COMMENT