இன்று என்ன? - இளம் விடுதலை வீரர் குதிராம் போஸ்


இன்று என்ன? - இளம் விடுதலை வீரர் குதிராம் போஸ்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் குதிராம் போஸ் 1889-ம் ஆண்டு வங்காளத்தின் மிதுனப்பூர் கிராமத்தில் பிறந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டார். 1902-ம் ஆண்டு 13 வயதிருக்கும்போதே விடுதலைப் போராட்ட வீரர்கள் அரவிந்தர், சகோதரி நிவேதிதை ஆகியோரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டார். 1904-ல் மேதினிப்பூர் கல்லூரியில் படித்தார்.

1905-ல் வங்கப் பிரிவினை போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர், பல காவல் நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. யார் தாக்குகிறார்கள் என்று தெரியாமல் ஆங்கிலேய அரசு மிரண்டது. 1908-ல்குதிராம் கைது செய்யப்பட்டபோது, குதிராம் என்ற இளைஞனின் செயல் என்று ஆங்கிலேய அரசு கண்டுபிடித்தது.

அதனால் குதிராமுக்கு 1908 ஆகஸ்ட் 11-ம் தேதி முசாபர்பூர் சிறையில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. 18 வயதான அவர் "வந்தே மாதரம்" என முழங்கி கொண்டே அகால மரணமடைந்தார்.

FOLLOW US

WRITE A COMMENT

x