டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் 1981 ஆகஸ்ட் 8-ம் தேதி பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே தீவிரமாக டென்னிஸ் பயிற்சி மேற்கொண்டார். தொழில்முறை ஆட்டக்காரராக 1998-ல் களம் இறங்கினார். 1999-ல்உலகத் தரவரிசையில் 100-வது இடம் பிடித்தார். 2003-ல் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை விம்பிள்டனில் வென்றார்.
2008 ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார். ஒற்றையர் ஆண்கள் பிரிவில் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று டென்னிஸ் உலகின் மன்னராக திகழ்கிறார். தென் ஆப்பிரிக்காவில் குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டு, சுகாதாரத்தை மேம்படுத்த ஆப்பிரிக்கா - சுவிஸ் சாரிட்டி என்ற அறக்கட்டளை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்க ஓபன் போட்டியில் தான் பயன்படுத்திய டென்னிஸ் ராக்கெட்களை ஏலம்விட்டு, அதில் கிடைத்த தொகையை, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையாக வழங்கினார். யுனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.
WRITE A COMMENT