பாவேந்தர் பாரதிதாசனின் மாணவர் ரங்கசாமி. இவர் புதுச்சேரி யூனியன் பிரதேசம் வில்லியனூரில் 1915-ல் பிறந்தார். திண்ணைக் கல்வி கற்றார். பின்னர் வில்லியனூர் பள்ளியில் பயின்றார். 1937-ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.
தமிழ் ஆர்வத்தால் கவிதை எழுதத் தொடங்கினார். பாரதியின் நினைவு நாளையொட்டி ‘பாரதி நாள் இன்றடா’ என்ற இவரது முதல் கவிதை, ‘தமிழன்’ நாளிதழில் வெளிவந்தது. இவரது கவிதைகளை வெளியிட்டுவந்த ‘தமிழன்’ இதழாசிரியர் இவருக்கு ‘வாணிதாசன்’ என்று பெயர் சூட்டினார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் வல்லமை பெற்றிருந்தார். பிரான்ஸ் நாடு ‘செவாலியர்’ விருது வழங்கியது.
‘தமிழச்சி கொடிமுல்லை’, ‘தொடுவானம்’ ஆகிய குறுங்காப்பிய நூல்கள் எழுதியுள்ளார். இதனால் தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த், கவிஞரேறு, பாவலர் மணி, புதுமைக் கவிஞர், தமிழ்நாட்டுத் தாகூர் என்றெல்லாம் போற்றப்பட்டார். புதுவை அரசு சேலியமேடு உயர்நிலைப் பள்ளிக்கு வாணிதாசன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இறுதிவரை இலக்கியத் தொண்டாற்றிய வாணிதாசன் 1974 ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார்.
WRITE A COMMENT