இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி 1984 ஆகஸ்ட் 3-ம் தேதி தெலங்கானா (அன்றைய ஆந்திர பிரதேசம்) செகந்தராபாத்தில் பிறந்தார். சிறுவயதில் கிரிக்கெட் மீதே அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அதற்கான உபகரணங்கள் வாங்குவதற்கு பணம் இல்லாததால் கால்பந்து விளையாட தொடங்கினார்.
16 வயதில் மலேசியாவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடினார். 2005-ல் இந்திய ஆடவர் கால்பந்து அணியில் இணைந்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் கோல் அடித்தார்.
2007, 2011-ம்ஆண்டுகளில், அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு வழங்கும் ஆண்டின் சிறந்த வீரர் பதக்கத்தை வென்றார். சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்களில் அதிக கோல் அடித்தவர்களுக்கான பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அலிடேய், லயனல் மெஸ்ஸிக்கு அடுத்த இடத்தில் 91 கோல்களுடன் சுனில் சேத்ரி இடம்பெற்றுள்ளார். சுனில் சேத்ரியை பாராட்டும் விதமாக பிஃபா கால்பந்து சம்மேளனம் அவர் வாழ்க்கை குறித்த 3 தொடர்களை வெளியிட்டது.
WRITE A COMMENT