பிரபல கர்னாடக இசைப் பாடகர் வரதாச்சாரியார் செங்கல்பட்டு கொளத்தூரில் 1876 ஆகஸ்ட் 1-ம் தேதி பிறந்தார். சிறுவயதில் தெருக்கூத்து, பஜனைப் பாடல்களை கேட்டு இசை பயின்றார். 14-வது வயதில் திருவையாறில் பட்டணம் சுப்பிரமணிய ஐயரிடம் இசை பயின்றார்.
இசையில் ஈடுபாடு என்றாலும், குடும்பச்சூழல் காரணமாக சர்வே துறையில் வேலைக்கு சேர்ந்தார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பணிபுரிந்தார். மைசூர் நவராத்திரி விழாவில் பாட அழைப்பு வந்தது. அப்போது இவர் பாடிய பல்லவியைக் கேட்ட மைசூர் மகாராஜா, இவரை அரண்மனை ஆஸ்தான பாடகராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் இசைத் துறையின்தலைவராகப் பணியாற்றியபோது, இவரது ஆலோசனைபடி டிப்ளமோ இசைப் படிப்பு தொடங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக் கல்லூரி, சென்னை அடையாறு கலாேக்ஷத்ராவில் முதல்வராகப் பணியாற்றியுள்ளார். தான் எழுதி வைத்திருக்கும் இசைக்குறிப்புகளை மாணவர்களிடம் கொடுக்காமல் ‘நீங்களே உருவாக்குங்கள்’ என்று நம்பிக்கையூட்டுவார். இவருக்கு சென்னை மியூசிக் அகாடமி 1932-ல்‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கி கவுரவித்தது.
WRITE A COMMENT