சுதந்திர போராட்ட வீரர் உதம் சிங் 1899-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் சங்க்ரூர் மாவட்டத்தில் சுனம் கிராமத்தில் பிறந்தார். இயற்பெயர் ஷேர் சிங். தந்தை இறந்தவுடன், அமிர்தசரஸில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். 1918-ல் பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
ஜாலியன்வாலாபாக் பகுதியில் 1919-ல் ஆங்கிலேயர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சியை வேரறுக்கும் நோக்கத்துடன் ஜெனரல் மைக்கேல் ஓ'டையரை படுகொலை செய்ய உதம் சிங் திட்டமிட்டார். 1940-ல் லண்டனில் உள்ள காக்ஸ்டன் ஹாலில் மைக்கேல் மேடையில் பேசும்போது உதம் சிங் அவரை துப்பாக்கியால் சுட்டார்.
இதனால் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்காக லண்டன் பிரிக்ஸ்டன் சிறையில் அடைக்கப்பட்டார். 1940 ஜூலை 31-ல் பென்டன்வில் சிறையில் தூக்கிலிடப்பட்டார். இந்திய விடுதலைக்காக தன் உயிரையே துச்சமென கருதி வீரமரணம் அடைந்த உதம் சிங்கின் பூத உடல் இந்தியா கொண்டுவரப்பட்டு ஜாலியன்வாலாபாக் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
WRITE A COMMENT